"குஜராத் தேர்தலில் பயன்படுத்தியதை இங்கே பயன்படுத்தக்கூடாது.." கர்நாடக காங்கிரஸ் தலைவர் அதிரடி

Update: 2023-03-30 05:43 GMT
  • குஜராத் தேர்தலில் பயன்படுத்திய மின்னணு வாக்கு இயந்திரங்களை கர்நாடக தேர்தலுக்கு பயன்படுத்தக் கூடாது என கர்நாடக மாநில காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
  • இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், தேர்தல் ஆணையத்திடம் குஜராத் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கர்நாடகா தேர்தலுக்கு பயன்படுத்தக் கூடாது என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றார்.
  • வாக்குப்பதிவு இயந்திரங்களை சோதனை செய்யும் போது, அதன் உண்மை தன்மையை நேரில் வந்து தெரிந்து கொள்ளுமாறு தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாக தெரிவித்தார்.
  • தாங்கள் சென்று அதை பரிசோதித்த பிறகு அடுத்த கட்ட முடிவெடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்