தமிழ்நாட்டில் சிலை கடத்தல் தொடர்புடைய 41 வழக்குகளில் வழக்கு நாட்குறிப்புகளை காணவில்லை, அதனை கண்டறிய ஓய்வுபெற்ற காவல் உயரதிகாரி தலைமையில் எஸ்ஐடி அமைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் விசாரித்த போது, 300 கோடி ரூபாய் மதிப்புடைய சிலைகள் கடத்தல் வழக்குகளின் நாட்குறிப்புகள் விவகாரத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என மனுதாரரர் தெரிவிக்கப்பட்டது. வாதத்தை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், ஜனவரி 27 ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டதோடு, தமிழ்நாடு உள்துறை செயலாளர் ஜனவரி 30 ஆம் தேதி ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டது.