திட்ட பகுதிகளில் 68 ஏக்கர் பரப்பளவில் காடு வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டம் கொண்டு வரப்பட்டால் தமிழகத்துக்கு நிறைவான தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 ஆயிரத்து 500 மெகா வாட் போக மற்ற தேவைகளுக்கு நாம் தற்போது வெளியில் இருந்து தான் மின்சாரம் வாங்கி கொண்டு இருப்பதாகவும், இத்திட்டத்தால் உள்ளூர் மக்களுக்கான பொருளாதர வளர்ச்சி மேம்படுத்தப்படும் என்றும், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.
ஆண்டிற்கு 2 மில்லியன் டன் நிலக்கரி இறக்குமதி செய்து துறைமுகத்தில் இருந்து பைப் மூலம் கொண்டுவரப்படும் என்றும், ஆழ்கடலில் இருந்து நீர் கொண்டுவரப்படுகிறது - இது தமிழக அரசின் திட்டம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் தரம் நிர்ணயிக்கப்பட்டுள்ள வரம்புகளுக்கு உள்ளாகவே இருப்பதாகவும், நீர் மாசு, ஒலி மாசு எல்லாம் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்யப்பட்டதில், எல்லாம் வரம்புக்கு உள்ளாகவே உள்ளதாகவும், நிலப்பரப்பில் ஆபத்தை ஏற்படுத்த கூடிய மாற்றங்கள் இருக்காது என்றும், இத்திட்டத்தால் வேலை வாய்ப்பு கிடைக்கும்,கூடுதல் வசதிகள் பெருகும் - வேறு ஒரு இடத்திற்கு மக்கள் குடி பெயர வேண்டிய தேவை இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளது.