தலைகுப்புற கவிழ்ந்த கல்யாண வீட்டிற்கு சென்ற பஸ் - 5 பேர் பலி.. உள்ளே இருந்த 27 பேர் நிலை?

Update: 2024-12-20 11:52 GMT

மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் பகுதியில், திருமண விழாவில் கலந்து கொள்ள சென்ற தனியார் பேருந்து குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். 27 பேர் காயம் அடைந்துள்ளனர்.

புனேவில் இருந்து மகத் பகுதியில் நடைபெறும் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது தாமினி காட் பகுதியில் விபத்துக்குள்ளானது. மலைப்பகுதியில் கீழ்நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து தகவல் அறிந்தது சம்பவ இடத்திற்கு மங்காவுன் காவல்துறையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இதில் இரண்டு ஆண்கள் மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் குப்புறக்கவிந்த பேருந்துக்குள் சிக்கிக் கிடந்த 27 இதர பயணிகளும் மீட்கப்பட்டன்ர். அவர்கள் முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்