பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர், கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பாக சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது வழக்கு விசாரணையை ஜனவரி 27ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். நிர்வாக காரணங்களுக்காக சவுக்கு சங்கரின் பிரதான வழக்கு விசாரணையை மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு இரண்டாவது சிறப்பு நீதிமன்ற நீதிபதி அல்லி அமர்வுக்கு மாற்றம் செய்தார்.