ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி திடீரென ஆர்ப்பாட்டத்தில் குதித்த 1000 பேர்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி அமைப்பு சாரா தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஸ்டெர்லைட் உள்ளிட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் வேலை கிடைக்காத இளைஞர்கள் குற்ற செயலில் ஈடுபட்டு வருவதாகவும், மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் உள்ளிட்ட ஆலைகளை உடனடியாக திறக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இதில், தமிழ்நாடு எழுச்சி தொழிலாளர் நலச் சங்கம் மற்றும் அமைப்பு சாரா தொழிற்சங்கம் சார்பில் கலந்து கொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.