தனிநபர் மசோதாவுக்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு - வாக்கெடுப்பில் நடந்த டிவிஸ்ட்

Update: 2022-12-10 11:39 GMT

மாநிலங்களவை பாஜக எம்பி கிரோரி லால் மீனா அறிமுகம் செய்த பொது சிவில் சட்ட தனிநபர் மசோதாவிற்கு எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

பொது சிவில் சட்டம் தொடர்பான விசாரணைகள் உச்சநீதிமன்றத்திலும் நடைபெற்று வருகின்றன.

இந்த சூழலில், தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பொதுசிவில் சட்ட தனிநபர் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் பாஜக எம்பி கிரோரி லால் மீதா மசோதாவை அறிமுகம் செய்த போது, திமுக, திரிணாமூல் காங்கிரஸ், கம்யூனிட்ஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தின.

இதனால் மசோதாவை அறிமுகப்படுத்துவது தொடர்பாக மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் வாக்கெடுப்பு நடத்தினார்.

அதில் 63 உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிராகவும், 23 பேர் ஆதரவாகவும் வாக்களித்ததால் மசோதாவை தாக்கல் செய்வது தோல்வியடைந்தது.  

Tags:    

மேலும் செய்திகள்