கொட்டி தீர்க்கும் கனமழை.. மின்னல் தாக்கி பலியான நபர்.. கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி | Kallakurichi
உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் பலத்த இடியுடன் பரவலாக மழை பெய்தது... உளுந்து பயிர் செய்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக ஆயிரம் ஏக்கருக்கு மேல் உளுந்தூர்பேட்டை பகுதிகளில் உளுந்து பயிர்கள் சேதம் அடைந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது... கனமழையில் பள்ளி மாணவர்கள் நனைந்து கொண்டே சிறப்பு வகுப்புகளுக்கு சிரமப்பட்டு சென்றனர்.
வயலுக்குச் சென்ற எறையூர் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் என்ற இளைஞர் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆனந்துக்கு கடந்த ஓராண்டிற்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் 2 மாத கைக்குழந்தையுடன் அவரது மனைவி தவித்து வருகிறார்...