#BREAKING || ஞானசேகரனோடு பேசிய அந்த 2வது நபர் யார்? அவிழ்ந்தது மர்மம்.. போலீசே எதிர்பாரா ட்விஸ்ட்
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்து கைது செய்யப்பட்ட குற்றவாளி குறித்து புதிய தகவல்கள்.
செல்போன் எண்ணை வைத்து காவல்துறையிடம் சிக்காமல் இருக்க , flight mode-ல் செல்போனை வைத்திருந்ததாக காவல்துறை தகவல்.
செல்போனில் மற்றொரு நபரிடம் பேசியது போல் நாடகமாடி உள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவி இரவு முழுவதும் அறையில் அழுது கொண்டிருந்ததாகவும், பின்னர் மறுநாள் காலையில் தோழிகளிடம் நடந்த சம்பவம் குறித்து கூறிய பின்னர் காவல் கட்டுப்பாடு அறைக்கு தொடர்பு கொண்டு முதலில் புகார் தெரிவித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை செய்த மாணவி குறித்து வீடியோ மட்டுமல்லாமல் மேலும் சில வீடியோக்களும் ஞானசேகரன் செல்போனில் இருந்ததை காவல்துறை கண்டுபிடித்துள்ளனர்.
சிசிடிவி கேமரா முன்பு முகத்தை மூடிவிட்டு செல்லும்போது, கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பழைய குற்றவாளி என்பதால் ஞானசேகரன் அடையாளம் குறித்து காவல்துறைக்கு தெரியவந்துள்ளது.
ஞானசேகரனை காவல்துறை பிடித்த பின்னர், வீடியோ கால் மூலம் பாதிக்கப்பட்ட மாணவி உறுதி செய்துள்ளார்.
சந்தேகப்படும்படி அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட அங்கு இருந்த 300க்கும் மேற்பட்டோரிடம் காவல்துறை விசாரணை நடத்தியுள்ளனர்.