யார் இந்த ஞானசேகரன்?.. 4 மனைவிகள்.. ECRல் கணக்கே இல்லாமல் உல்லாசம் -தொல்லை தாங்காமல் மனைவிகளே ஓட்டம்

Update: 2024-12-26 05:53 GMT

அதில் தானும் தன் காதலரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது பின்னால் இருந்து வந்த 30 வயது மதிக்கத்தக்க நபர் “நீங்கள் ஒன்றாக இருந்ததை வீடியோ எடுத்துள்ளேன்“ என மிரட்டியதாகவும், தாங்கள் இருவரும் கெஞ்சியபோதும் தான் கூறுவதைக் கேட்காவிட்டால் வீடியோவை டீன், பேராசிரியர்களுக்கு காண்பிடித்து டிசி தர வைப்பேன் என மிரட்டல் விடுத்ததாகவும் FIRல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன் காதலனை அடித்து உதைத்து ஓடவிட்டு, உள்ளே பேராசியர்கள் தன் காதலனை விசாரித்துக் கொண்டிருப்பதாகவும், தன்னைத் தப்ப வைப்பதாகவும் கூறி வலுக்கட்டாயமாக தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது... முன்னதாக அந்த நபரின் அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்ததாகவும், மிரட்டி விட்டு, விட்டு விடுவேன் என அழைப்பில் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அலைபேசியில் இருந்து மாணவியின் தந்தை எண்ணை எடுத்துக் கொண்டதாகவும், அந்த நபர் கருப்பு சட்டை, கிரே ஜீன்ஸ், கருப்பு தொப்பி அணிந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது... மேலும் அந்த நபருடன் மேலும் ஒருவர் வந்திருந்த நிலையில் அவர் யார் என்பது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை. கைதான ஞானசேகரனுக்கு மொத்தம் 4 மனைவிகள் என போலீசார் தெரிவித்துள்ளனர். முதல் மனைவிக்கு 11 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், ஞானசேகரினின் பாலியல் கொடுமை தாங்காமல் மனைவி பிரிந்து சென்றுள்ளார்... 2வது மனைவிக்கும் 1 பெண் குழந்தை உள்ள நிலையில் அவரும் பிரிந்துள்ளார்... 3வது மனைவிக்கு குழந்தை இல்லாத நிலையில், 4வது மனைவிக்கு ஆண் குழந்தை உள்ளது... அடையாறில் பிரியாணி கடை வைத்திருக்கும் ஞானசேகரனுக்கு 1 நாளைக்கு 20 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும் எனவும், இரவு கடை மூடிய பின் மது அருந்திவிட்டு தன்னுடைய விலை உயர்ந்த ஜீப்பில் பந்தாவாக புறப்பட்டு கிழக்குக் கடற்கரை சாலை பகுதிக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது... அரசியல் கட்சி கூட்டங்களுக்கு ஜீப்பில் பந்தாவாக சென்று, அங்கு வரும் பெண்களிடம் நைசாக பேச்சு கொடுத்து அவர்களை தன் வலையில் விழ வைத்து விடுவார் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்... 

Tags:    

மேலும் செய்திகள்