சாலையோரம் நின்ற இருசக்கர வாகனம் மீது மோதிய வேன்.. தூக்கி வீசப்பட்ட குடும்பத்தினர் -பரபரப்புக் காட்சி

Update: 2023-08-21 04:01 GMT

மேட்டுப்பாளையத்தில் வேன் மோதியதில் இருசக்கர வாகனத்தில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தூக்கி வீசப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேட்டுப்பாளையம்_ கோவை சாலையில் உள்ள ஐஸ்கிரீம் கடைக்கு ஒருவர் தனது குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் வந்து இறங்கினார். அப்போது, சாலையில் வந்த வேன் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து நேராக வந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கியவர்கள் தூக்கி வீசப்பட்டனர். நல்வாய்ப்பாக சிறுகாயங்களுடன் உயிர்த்தப்பினர். அங்கு நின்றுகொண்டிருந்த காரில் இருந்த கேமராவில் பதிவான காட்சி வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்