கனவு இல்லம் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடிக் கல்வி, இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48, நான் முதல்வன், ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம் போன்ற பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக புகழாரம் சூட்டப்பட்டுள்ளது... மேலும், முதலீட்டாளர்களின் முதல் முகவரி திட்டம், புதுமைப் பெண் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டம், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம், மாபெரும் தமிழ்க் கனவுத் திட்டம், முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், நீங்கள் நலமா? திட்டம், மற்றும் அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் என முதல்வர் ஸ்டாலின், சொல்லியதை மட்டுமல்லாமல் சொல்லாததையும் செய்வோம் என்று கூறி நடைமுறைப்படுத்தும் பல்வேறு சிறப்பான திட்டங்களால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்ந்து மக்களின் வாழ்வாதாரமும் உயர்ந்துள்ளதாகப் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது...