திருவள்ளூர் மாவட்டம் மல்லியங்குப்பம் ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தங்களது கிராமத்தை ஆரணி பேரூராட்சியுடன் இணைப்பதால் 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் பறிபோகும் அபாயம் இருப்பதாக குற்றம் சாட்டிய கிராமமக்கள், சிறு குறு விவசாயிகள் வாழ்வாதாரம் இழக்க நேரிடும் என்பதால், பேரூராட்சியுடன் இணைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.