"பெண்களின் உரிமைகளை மீட்டெடுக்கும்.." ஈஷா கிராமோத்சவம் - நெகிழ்ந்து பேசிய மக்கள்..

Update: 2025-01-02 14:35 GMT

ஈஷா சார்பில் நடைபெற்ற நாட்டின் மாபெரும் விளையாட்டுத் திருவிழாவான 16ஆவது ஈஷா கிராமோத்சவத்தில் தென்னிந்திய மாநிலங்களின் பாரம்பரிய கலைகளை பிரதிபலிக்கும் வகையில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்த வகையில் தமிழ்நாடு சார்பில் பறையாட்டம் மற்றும் தவில் நாதஸ்வரம் இசை நிகழ்ச்சிகளும், கர்நாடகா சார்பில் பிலி வேசா எனும் புலி நடனமும், தெலங்கானா சார்பில் கோண்டு பழங்குடிகளின் குசாடி நடனமும், கேரளா சார்பில் செண்ட மேளம் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் ஆயிரம் பேர் கலந்துகொண்ட வள்ளி கும்மி, 500 பேர் பங்கேற்ற ஒயிலாட்டம், ஆயிரத்து 500 பேர் பங்கேற்ற கோலப் போட்டி ஆகிய நிகழ்ச்சிகளும் பிரமாண்டமாக நடைபெற்றன. குறிப்பாக பெண் விளையாட்டு வீராங்கனைகளின் ஈடுபாட்டுடனான விளையாட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பெண்கள் தங்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் ஈஷா கிராமோத்சவம் இருப்பதாக நெகிழ்ந்து பேசினர்.

Tags:    

மேலும் செய்திகள்