களைகட்டிய ஈஷா விளையாட்டுத் திருவிழா - போட்டிகளை தொடங்கி வைத்த மாரியப்பன், துளசிமதி

Update: 2025-01-02 14:44 GMT

ஈஷா சார்பில் நடைபெற்ற நாட்டின் மாபெரும் விளையாட்டுத் திருவிழாவான 16வது ஈஷா கிராமோத்சவத்தில் மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப்பட்ட வாலிபால் இறுதிப் போட்டிகளை வீராங்கனை துளசிமதி முருகேசனும், வீரர் மாரியப்பன் தங்கவேலுவும் பங்கேற்று துவக்கி வைத்தனர் . இதில் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர். பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில்,, தான் வென்ற வெள்ளிப் பதக்கத்தை சத்குருவின் கைகளால் வழங்க வேண்டும் எனக் கேட்டுப் பெற்றுக் கொண்டது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிகழ்வில் வீராங்கனை துளசிமதி முருகேசனும், வீரர் மாரியப்பன் தங்கவேலுவும் ஈஷா கிராமோத்சவம் குறித்து பாராட்டிப் பேசினர்.

Tags:    

மேலும் செய்திகள்