``ஊருக்குள் வரக் கூடாது'' எச்சரித்த இளைஞர் - கண்டம் துண்டமாக-கூறு போட்ட கும்பல் - ஷாக்கில் நாமக்கல்

Update: 2025-01-02 14:52 GMT

வேலகவுண்டம்பட்டி டாஸ்மாக் அருகே மது அருந்திய பெருக்காம்பாளையத்தை சேர்ந்த யஸ்வந்த், சூர்யா கும்பலுக்கும் இளைஞர் சஞ்சய்க்கும் இடையே முன்பகை இருந்துள்ளது. இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் ஊருக்குள் வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என அந்த கும்பலை இளைஞர் சஞ்சய் எச்சரித்துள்ளார். ஆத்திரம் அடைந்த யஸ்வந்த் கும்பல், இளைஞர் சஞ்சயை சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு தப்பிச் சென்றது. தகவல் அறிந்த போலீசார், சஞ்சயை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பரமத்தி டி.எஸ்.பி சங்கீதா தலைமையிலான தனிப்படை , கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். யார் பெரியவன் என ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் வேலகவுண்டம்பட்டி ஊர்மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்