லட்டு; வார்தைவிட்ட கார்த்தி... கொதித்தெழுந்த பவன்... கார்த்தியின் இமீடியட் ரியாக்சன்

Update: 2024-09-24 16:46 GMT

திருப்பதி லட்டு விவகாரம் பூதாகரமாகியிருக்கும் சூழலில், இது தொடர்பான சர்ச்சையில் நடிகர் கார்த்தியும் சிக்கியிருக்கிறார். இதற்கு ஆந்திர துணை முதல்வரான பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்து கொந்தளிக்கவே பதிலுக்கு மன்னிப்பும் கேட்டிருக்கிறார் கார்த்தி...

'மெய்யழகன்' பட புரோமோஷனுக்காக ஆந்திரா சென்ற நடிகர் கார்த்தி

பிரசித்தி பெற்ற திருப்பதி லட்டு, தற்போது பேசு பொருளுக்கு உள்ளாகி சர்ச்சையில் தகித்து வருகிறது...

லட்டில் மாமிசக் கொழுப்பு கலக்கப்பட்டது தொடங்கி, குட்கா பாக்கெட் கண்டெடுக்கப்படது வரை ஏழுமலையான் பக்தர்களை இந்த லட்டு விவகாரம் ஆட்டம் காணச் செய்திருக்கிறது..

தனது மெய்யழகன் பட புரோமோஷனுக்காக ஆந்திரா சென்ற நடிகர் கார்த்தி, இந்த லட்டு தொடர்பான சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்..

நிகழ்ச்சியில், கார்த்தியிடம் நெறியாளர் வந்து, கண்ணா லட்டு திங்க ஆசையா.. ரெண்டு லட்டு திங்க ஆசையா என அவரின் சிறுத்தை பட காமெடி டெம்ப்ளைட்டை காண்பித்து தொகுப்பாளர் கேட்க.. அதற்கு கார்த்தி அளித்த பதில்தான் தற்போது சம்பவமாகி இருக்கிறது...

லட்டு குறித்து தற்போது பேசக்கூடாது எனவும், இப்போது இது சென்சிட்டிவ் டாப்பிக் எனவும் கூறி கார்த்தி கடந்துபோய் இருக்கிறார்...

ஆனால், கார்த்தியின் பதில், நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாணை கொந்தளிக்க வைத்திருக்கிறது...

திருப்பதி லட்டு விவகாரத்தில் ஏழுமலையானிடம் மன்னிப்பு கேட்கும் விதமாக, 11 நாட்கள் விரதம் இருந்து வரும், அவர், அதெப்படி நீங்கள் லட்டை சென்சிடிவ் கண்டென்ட் என்பீர்கள், லட்டை வைத்து ஜோக் செய்கிறீர்களா என கொதித்தெழுந்திருக்கிறார்...

இப்படி லட்டு விவகாரம் அனல் பறக்க, உடனே இது குறித்து தன் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்ட கார்த்தி, நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்...

லட்டு விவகாரத்தால் ஆந்திராவே ஸ்தம்பித்திருக்கும் சூழலில், பட புரோமஷனுக்கு சென்ற இடத்தில் கார்த்தி இதில் சிக்கியதும், அதற்கு பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்ததும் விவகாரத்தை மேலும் சூடாக்கி இருக்கிறது...

Tags:    

மேலும் செய்திகள்