எதிர்ப்புகளுக்கு நடுவே திறக்கப்பட்ட டோல்கேட் - மக்கள் சொல்லும் கருத்து என்ன?
விழுப்புரம் – நாகை தேசிய நெடுஞ்சாலையில் சிதம்பரம் அருகே கொத்தட்டை பகுதியில் புதியதாக சுங்கச்சாவடி திறக்கப்பட்டுள்ளது. இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், டோல்கேட்டை முற்றுகையிட்டு சுங்கச்சாவடி ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். புதிய டோல்கேட்டை கடப்பதற்கு நீண்ட நேரமாகுவதாகவும், உள்ளூர் மக்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டிய அவர்கள், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு தமிழ் தெரியாததால், பல்வேறு பிரச்சினை ஏற்படுவதாக தெரிவித்தனர். மேலும், முதல்வர், துணை முதல்வர் இந்த விவகாரத்தில் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.