சென்னை அருகே கொழுந்துவிட்டு எரிந்த நெருப்பு.. மூச்சுத் திணறலில் சிக்கிய மக்கள்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பழைய பேப்பர் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள இந்த கிடங்கில், பழைய பேப்பர், கோணி, பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவை சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. இந்த கிடங்கில் திடீரென தீப்பற்றி, காற்றின் வேகத்தால் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. தீ காரணமாக அப்பகுதியில் கரும்புகை பரவியதால், பொதுமக்களுக்கு கண் எரிச்சலும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்க போராடினர்.