தாலி கட்டுவதற்கு முன் காதலிக்கு கன்னித்தன்மை டெஸ்ட் கம்பி நீட்டிய காதலன்! தலைசுற்ற வைக்கும் சம்பவம்

Update: 2024-10-01 16:05 GMT

திருத்தணியில், தாலி கட்டுவதற்கு முன் மண்டபத்தை விட்டு ஓடிய காதலனுக்காக, அவரது காதலி காத்துக்கிடக்கிறார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்தவர் ஸ்ரீதரண். இவரும் பெங்களூரை சேர்ந்த அனுசியா என்பவரும் ஒரே ஐ.டி.நிறுவனத்தில் பணிபுரிந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக காதலித்தும் வந்துள்ளனர். இந்நிலையில், இருவீட்டார் சம்மதத்தின்பேரில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து, செப்டம்பர் 15ஆம் தேதி திருமணமும் நிச்சயிக்கப்பட்டது. திருத்தணியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்து முடிந்தது. இந்நிலையில், தாலி கட்டுவதற்கு முன், மணமகன் ஸ்ரீதரண் மாயமானார். இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. ஸ்ரீதரணை போலீசார் கடந்த 5 நாட்களுக்கு முன் காவல்நிலையம் வரவைத்தனர். அப்போது நாளை திருமணம் செய்து கொள்கிறேன் என்று எழுதி கொடுத்துவிட்டு சென்ற ஸ்ரீதரண், மீண்டும் தலைமறைவானார். இந்நிலையில், தனது காதலனை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு, அனுசியா கடந்த 16 நாட்களாக காத்திருந்து வருகிறார். மணமகன் தரப்பில் சாதி பார்ப்பதே இதற்கு காரணம் எனவும், போலீசார் சம்பந்தமில்லாமல் தன்னை கன்னித்தன்மை பரிசோதனை செய்யச்சொல்கிறார்கள் எனவும் அனுசியா 

Tags:    

மேலும் செய்திகள்