மேற்குத் தொடர்ச்சி மலை உச்சி... தமிழக, கேரள எல்லைகளை இணைக்கும் புள்ளியில் ஊசலாடி நின்ற உயிர்

Update: 2024-09-12 07:06 GMT

மேற்குத் தொடர்ச்சி மலை உச்சி... தமிழக, கேரள எல்லைகளை இணைக்கும் புள்ளியில் ஊசலாடி நின்ற உயிர் - தமிழகம் கேள்விப்படாத ஓர் துயர சம்பவம்

மேற்குத் தொடர்ச்சி மலையின் உச்சி பகுதியில் அமைந்துள்ள கிராமத்தில் வசிக்கும் விவசாயிக்கு நேர்ந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

55 வயதாகும் அந்த விவசாயிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட அவரை மருத்துவமனைக்குக் கொண்ட சென்ற காட்சிகளும் ..அவர் வழியிலேயே உயிரிழந்த காட்சிகள் வலிகளை ஏற்படுத்தினாலும் இது தான் எங்கள் தினசரி வாழ்க்கை என்கிறனர் அந்த பகுதி மக்கள் வேதனையோடு...

தமிழக, கேரள எல்லைகளை இணைக்கும் தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு மலை தொடர்ச்சியின் உச்சியில் அமைந்துள்ளது பிச்சாங்கரை கிராமம். இங்கு மிளகு,காபி ஆகியவை ஏராளமாக விளைவிக்கப்படுகிறது. விவசாயப் பணிகளுக்காக சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த மலைப்பகுதியில் வசித்து வருகின்றன.

இந்த கிராம மக்கள் மருத்துவம் உள்ளிட்ட எந்த அடிப்படைத் தேவைகளுக்கும் கடுமையான பாறைகள் நிறைந்த 7 கிமீ மலைப்பாதையை கடந்து தான் முந்தல், போடி உள்ளிட்ட ஊர்களுக்கு வருகின்றனர். கர்ப்பிணிப் பெண்கள், உடல் நலக் குறைபாடு உள்ளவர்களுக்கு அவரச தேவைகள் என்றால் டோலி கட்டி தான் தூக்கி வரப்படுகின்றனர்.

இந்த நிலையில் தான் ஐம்பத்தைந்து வயதான விவசாயி ராமசாமிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட வழக்கம் போல டோலியில் கட்டி தூக்கி வந்துள்ளனர். ஆனால் பாதி வழியைக் கடப்பதற்குள் பரிதாபமாக உயிரிழந்தார் ராமசாமி.

கிராம மக்கள் சாலை அமைக்க நிலம் கொடுத்து பாதி பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் பல ஆண்டுகளாக மீதி பணிகள் முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. பல ஆண்டுகளாக முடிக்காமல் கிடக்கும் சாலைப் பணிகளை முடித்துக் கொடுத்தாலே எங்களுடைய வாழ்க்கை வேதனைகள் குறைந்து விடும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

அடிப்படை தேவைகள் இதெல்லாம் என்றிருக்கும் சூழலில் இன்னமும் அது கூட கிடைக்காமல் துயரப்படும் இவர்களின் குரல் உரியவர்களை சென்றடைய வேண்டும் என்பதே நோக்கம்...

Tags:    

மேலும் செய்திகள்