தூங்கிக்கொண்டிருந்த மாமனார் தலையில் அம்மிக்கல்லை போட்ட கொடூர மருமகன்.. தி.மலையில் பகீர் சம்பவம்

Update: 2024-01-19 04:35 GMT
  • திருவண்ணாமலை அருகே, குடும்பத் தகராறில் மாமனார் தலையில் மருமகன் அம்மிக் கல்லைப் போட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • ஆரணி டவுன் பகுதியை சேர்ந்த மனீஷா - மன்சூர் தம்பதிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
  • அந்த வகையில் மீண்டும் தகராறு ஏற்படவே, ஆத்திரமடைந்த மனீஷா தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் கோபத்துடன் மாமனார் வீட்டிற்கு வந்த மன்சூர், அங்கு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
  • அப்போது, ஆத்திரமடைந்த அவர், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மாமனார் ஜமால்பாஷாவின் தலையில் அம்மிக் கல்லைப் போட்டு அங்கிருந்து தப்பியோடினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜமல்பாஷாவை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
  • அதனைத் தொடர்ந்து காவல்நிலையத்தில் சரணடைந்த மன்சூர் மீது, புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், சிறையில் அடைக்கப்பட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்