ஆற்று வெள்ளத்தில் சடலத்தை எடுத்துச் செல்லும் அவலம்.. சோகத்தில் புலம்பும் மக்கள்

Update: 2024-11-02 01:55 GMT

ஆற்று வெள்ளத்தில் சடலத்தை எடுத்துச் செல்லும் அவலம்.. சோகத்தில் புலம்பும் மக்கள்

நத்தம் சமுத்திராப்பட்டி கிராமத்தில் திருமணிமுத்தாற்றின் கரையில் இடுகாடு அமைந்துள்ளது. 2 தினங்களாக கொட்டிய கனமழையால் திருமணிமுத்தாற்றில் அதிகளவு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்தநிலையில் கிராமத்தில் இறந்த முதியவர் உடலை, அவரது உறவினர்கள் ஆபத்தான சூழலில் திருமணிமுத்தாற்றில் இறங்கி எடுத்துச் சென்றனர். இடுப்பளவுக்கு மேல் சென்ற நீரில் ஆபத்தான முறையில் இறந்தவர் உடலை தலைக்கு மேல் வைத்து சுமந்து சென்று இடுகாட்டில் அடக்கம் செய்தனர். மழைக்காலங்களில் இறப்பவர்கள் உடலை இப்படிதான் கொண்டு செல்ல வேண்டிய அவலம் இருப்பதாக சொல்லும் கிராம மக்கள், அரசு திருமணிமுத்தாற்றில் மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்