தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிய இளம்பெண், 11 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்துள்ளார்.
பெரியகுளம் அருகே தென்கரை பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மூத்த மகள் பாரதி பிரியா, தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒட்டுண்ணி பூச்சி கடித்து அவருக்கு ஸ்க்ரப் டைபஸ் பாக்டீரியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. உடல் உறுப்புக்களை செயல் இழக்க செய்யும் அளவுக்கு பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, தீவிர சிகிச்சையால் அவர் இப்போது உடல் நலம் தேறியுள்ளார். இந்நிலையில், ஸ்க்ரப் டைபஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை வலியுறுத்தியுள்ளார்.