ஞானசேகரன் வீட்டில் 6 மணி நேர சோதனைக்கு பின் ஆவணங்களை ஆய்வு செய்யும் சிறப்பு புலனாய்வு குழு

Update: 2025-01-05 02:08 GMT

பாலியல் வழக்கில் சிக்கியுள்ள ஞானசேகரன் வீட்டில் பறிமுதல் செய்துள்ள ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில், சிறப்பு புலனாய்வு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை கோட்டூர்புரம் பகுதியில் உள்ள ஞானசேகரின் வீட்டில், சிறப்பு புலனாய்வு குழுவினர் சனிக்கிழமை காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக சிறப்பு புலனாய்வு குழு சோதனை மேற்கொண்டு இரண்டு அட்டைப்பெட்டைகளில் லேப்டாப், ஹார்டிஸ்க் மற்றும் சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்து சென்றனர். குறிப்பாக குற்ற வழக்குகளில் ஈடுபட்டு 200 சவரனுக்கும் அதிகமான தங்கம், வைர நகைகளை ஞானசேகரன் திருடி இருப்பதால், இதன் மூலமாக சம்பாதித்த ஆவணங்களையும், வேறு ஏதேனும் பாலியல் வன்கொடுமை செய்து பெண்களை வீடியோ எடுத்து வைத்துள்ளாரா? என ஹார்டிஸ்க், லேப்டாப் ஆகியவற்றை ஆய்வு செய்த பிறகே தெரியவரும் என தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், பல்வேறு குற்றவழக்குகளில் ஞானசேகரன் தொடர்பு இருப்பதால் திருட்டு மூலமாக வாங்கிய சொத்துக்களின் ஆவணங்களை பறிமுதல் செய்தனர். ஞானசேகரனின் மனைவியிடம் பறிமுதல் செய்துள்ள அனைத்து ஆவணங்கள் தொடர்பாகவும் கையெழுத்து பெற்று விசாரணை செய்து வாக்குமூலமாக அதை வீடியோ பதிவும் செய்துள்ளனர். 6 மணி நேர சோதனைக்கு பிறகு வெளியே வந்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஸ்னேக பிரியா, சிறிது காலம் நேரம் கொடுங்கள் விசாரணை செய்ய வேண்டும் என தெரிவித்து சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்