பொங்கல் பண்டிகைக்கு தயாராகும் மண்பானைகள்.. “லாபம் இல்லை'' - தொழிலாளர் வேதனை
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் மண்பாண்டங்கள் விறுவிறுப்பாக தயாராகி வருகின்றன... மண்பாண்ட பொருட்கள் செய்ய தேவையான களிமண் மற்றும் சிறுவகை மணல் ஆகியவை காரைக்கால் பகுதியில் கிடைப்பது அரிதாக உள்ள நிலையில் இங்கு மண் எடுக்கவும் அரசு தடை விதித்துள்ளதால் பணம் கொடுத்து மண் வாங்க வேண்டிய சூழலுக்கு மண்பாண்டத் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 70 ஆண்டுகளாக இத்தொழில் செய்து வரும் மேல ஓடுதுறை பகுதியை சேர்ந்த முதியவர் தங்கையன் 70 ஆண்டுகள் முன்பு 20, 25 பைசாவுக்கு பானை விற்றபோது கிடைத்த லாபம் தற்போது 100 ரூபாய்க்கு விற்றாலும் கிடைக்கவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தார்.