வழக்கறிஞர் போல நடித்து பண மோசடி செய்த நபர் கைது | Fake Advocate | Money Scam

Update: 2025-01-05 02:19 GMT

சென்னையில், வங்கியில் கடன் கேட்டு தொந்தரவு செய்வதை தடுப்பதாக கூறி, வழக்கறிஞர் போல நடித்து பண மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கு, முக நூல் மூலம் வினோத் குமார் என்பவருடன் கார் வாங்குவது தொடர்பாக பழக்கம் ஏற்பட்டது.

வினோத் குமார் தான் வழக்கறிஞராக இருப்பதாக கூறி அவருடன் நெருங்கி பழகி வந்தார். வங்கியில் பெரும் தொகை கடன் பெற்றுள்ளதால் வங்கியில் இருந்து தனக்கு தொல்லை கொடுப்பதாக சரவணன், வினோத் குமாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதற்கு வினோத் குமார் போலியான ஆதாரங்களை காண்பித்து, லோக் அதாலத் மூலம் வழக்குபதிவு செய்து, கட்ட வேண்டிய பணத்தை இன்சூரன்ஸ் மூலமாக கழித்து விடலாம் எனவும் பின்னர் வங்கியில் இருந்து தொந்தரவு செய்யவிடாமல் பார்த்து கொள்வதாகவும் கூறி ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதற்கு சிறிதளவு பணம் செலவாகும் எனக்கூறி பின், 2.38 லட்சம் ரூபாய் பணத்தை வினோத் குமாருக்கு, ஜிபே மூலமாக சரவணன் அனுப்பி உள்ளார். தொடர்ச்சியாக வங்கியில் இருந்து கடன் தொகையை செலுத்துமாறு சரவணனுக்கு போன் வந்ததால், தான் ஏமாந்ததை உணர்ந்த சரவணன் சென்னை உயர்நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதன் அடிப்படையில், பொய்யான ஆவணத்தை புனைத்தல், அட்வகேட் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, வினோத் குமாரை போலீசார் கைது செய்தனர்.

இவரிடமிருந்து வக்கீல் கோட், அட்வகேட் அச்சு பேனா, ஒரு கார் மற்றும் போலியான வழக்கறிஞர் ஐடி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்