திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியில் நள்ளிரவில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு

Update: 2025-01-05 01:51 GMT

நள்ளிரவில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு

வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியில் 2 நாட்களாக நடந்து வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு

ஜன.3 முதல் நடந்து வந்த அமலாக்கத்துறை சோதனை 44 மணிநேரத்திற்கு பிறகு நிறைவு

8 கார்களில் வந்திருந்த 15க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், சோதனையை முடித்துக் கொண்டு துணை ராணுவ படையினருடன் நள்ளிரவு 2.40 மணிக்கு புறப்பட்டனர்

கல்லூரி தொடர்பான ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனை ஆவணங்கள், கணினி ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றதாக தகவல்

அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்ற சுமார் 4.30 மணிநேரத்தில், 2 நாட்களாக நடந்து வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு 

Tags:    

மேலும் செய்திகள்