சென்னை லோக்கல் ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு | Chennai Local Train | Passangers
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில் சேவையில் ஞாயிறன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் பணிமனையில் மேற்கொள்ளப்படும் பணிகள் காரணமாக காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை இரு மார்க்கங்களிலும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கு மாற்றாக சென்னை கடற்கரை பல்லாவரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இதேபோல் செங்கல்பட்டு கூடுவாஞ்சேரி இடையே இரு மார்க்கத்திலும் சிறப்பு ரயில்கள், குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.