``குடிநீரில் கலக்கும் கழிவுநீர்?'' - அமைச்சரிடம் மக்கள் குற்றச்சாட்டு | Chennai
சென்னை பெரியமேட்டில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் குழந்தைகள், முதியவர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுவதாகவும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சென்னை பெரியமேட்டில் விதி வீதியாக நடைபயணம் மேற்கொண்டு அமைச்சர் சேகர் பாபு பொது மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். மேயர் பிரியா, மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பட்டா, சாலை, குடிநீர் வசதிகள் குறித்து கோரிக்கை வைத்த பொதுமக்கள் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக குற்றம் சாட்டினர்... குறைகளை நிவர்த்தி செய்வதாக அமைச்சர் சேகர்பாபு உறுதியளித்துள்ளார்...