"அவர தூக்கி வெளியேத்துங்க" - நீட் வழக்கில் உச்சகட்ட கடுப்பான தலைமை நீதிபதி சந்திரசூட்

Update: 2024-07-24 11:22 GMT

உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வு தொடர்பான விசாரணையின்போது தலைமை நீதிபதி மற்றும் மூத்த வழக்கறிஞர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மூத்த வழக்கறிஞர் நரேந்திர ஹுடோ தனது வாதத்தை முன்வைத்தார்.

அச்சமயம், மற்றொரு மூத்த வழக்கறிஞரான மேத்யூ நெடும்பரா அடிக்கடி குறுக்கிட்டு வந்துள்ளார்.

இதனால் தலைமை நீதிபதி சந்திரசூட் ஆத்திரமடைந்த நிலையில், மேத்யூவுடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அமைதியாக உட்காருங்கள்... இல்லாவிட்டால் நீதிமன்றத்தைவிட்டு வெளியேற்றிவிடுவதாக எச்சரித்துள்ளார்.

எனினும் தொடர்ந்து பேசியதால், காவலர்களை அழைத்து, வழக்கறிஞர் மேத்யூவை வெளியேற்றுமாறு தலைமை நீதிபதி கூறினார்.

அப்போது தானே வெளியேறுவதாகக்கூறி மேத்யூ நெடும்பாரை வெளியேறினார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்