"அய்யா இதுதான்யா என்ன கடிச்சுடுச்சு..." முரட்டு பாம்போடு வந்த நபர்.. அரண்டு ஓடிய டாக்டர்ஸ்
"அய்யா இதுதான்யா என்ன கடிச்சுடுச்சு..." முரட்டு பாம்போடு வந்த நபர்.. அரண்டு ஓடிய டாக்டர்ஸ்
கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த நபரால் பரபரப்பு
பீஹார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் தன்னை கடித்த பாம்பை பிடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. பாம்பிடம் கடிபட்ட நபர், ஒரு கையில் பாம்பின் வாயைப் பிடித்தபடி தனக்கு சிகிச்சை அளிக்குமாறு கூறியுள்ளார். இதனால் அவரை நெருங்க மருத்துவர்கள் அஞ்சினர். சிறிது நேரத்தில் தரையில் பாம்பை பிடித்தப்படி படுத்த அவர், மயக்கம் அடையவே,,, அவர் கையை விட்டு பாம்பு நழுவிச் சென்றது. தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.