சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வளையபந்து விளையாடியதை ஏராளமானோர் உற்சாகத்துடன் பார்த்து ரசித்தனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருத்தங்கலில் தனியார் அமைப்பு சார்பில் வளையபந்து போட்டி நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, போட்டியை தொடங்கி வைத்தது மட்டுமின்றி விளையாட்டு வீரருடன் இணைந்து வளையப்பந்து விளையாடி மகிழ்ந்தார்.