வீட்டுக்குள் புகுந்த கழிவுநீர்.. சாலையில் இறங்கிய மக்கள்.. பரபரத்த பல்லாவரம்

Update: 2024-08-30 16:03 GMT

தாம்பரம் மாநகராட்சியில் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்ததால், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பம்மல் 7 வது வார்டு அண்ணா நகர், தயாளர் தெருவில் உள்ள வீடுகளுக்குள் கழிவு நீர் புகுந்தது. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த திமுக மண்டல குழு தலைவர் கருணாநிதி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த மக்கள் அவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ததால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்