காணும் பொங்கலை ஒட்டி மெரினா கடற்கரையில் இரவு 10 மணிக்கு மேல் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என சென்னை கூடுதல் ஆணையர்கள் தெரிவித்துள்ளனர். ஆணையர் தெற்கு பிரேம் ஆனந்த் சின்ஹா, வடக்கு கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் மற்றும் போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பைக் ரேஸ், வீலிங், அதிவேகமாக வாகனத்தை ஓட்டுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க 3 ஆயிரத்து 168 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.