- திருமணமான ஆறே மாதத்தில் மாமியார் கொடுமையால் மின் வாரிய அதிகாரியின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- கன்னியாகுமரி மாவட்டம் சுதந்திரத்தைச் சேர்ந்த கார்த்திக் மின் வாரிய அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மேட்ரிமோனி இணையதளம் மூலமாகக் கோவையைச் சேர்ந்த சுருதி என்பவருடன் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. சுருதியின் தந்தை பாபு மின்வாரிய மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். திருமணத்தின் போது 45 சவரன் தங்கநகை மற்றும் 5 லட்சம் ரூபாய் வரதட்சணையாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. முதல் மூன்று மாதம் சந்தோஷமாகச் சென்ற நிலையில் கார்த்திக்கின் தாயார் செண்பகவல்லி சுருதியை வரதட்சணை கேட்டு கொடுமை செய்து இருக்கிறார். அதன் பின்னர் பல்வேறு கொடுமைகளுக்குச் சுருதி ஆளாகி இருக்கிறார். கணவர் அருகில் அமரக்கூடாது, அவரது அருகில் உட்கார்ந்து சாப்பிடக் கூடாது எனப் பல விதங்களில் மாமியார் செண்பகவல்லி கொடுமை செய்து வந்து இருக்கிறார். இறுதியாகச் சுருதியை வீட்டை விட்டுச் செல்லுமாறு கடுமையாக நடந்து கொண்டு இருக்கிறார் செண்பகவல்லி. கொடுமை தாங்க முடியாத சுருதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பாபுவிடம் கூறப்பட்டு இருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பாபு குடும்பத்தினர் உடனடியாக கோவையில் இருந்து புறப்பட்டு கன்னியாகுமரி வந்துள்ளனர்.