பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் 450 சவரன் நகையா? - அரண்டு போன அலங்காநல்லூர்

Update: 2024-05-12 03:47 GMT

மதுரை அருகே அலங்காநல்லூரில், பெண் காவல் ஆய்வாளர் வீட்டின் கதவை உடைத்து, 450 சவரன் நகை மற்றும் 5 லட்ச ரூபாய் ரொக்க பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. பாசிங்காபுரம் பகுதியில் வசித்து வரும் ஷர்மிளா, திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். அவரது கணவர் உதைக்கண்ணன், கத்தார் நாட்டில் பெட்ரோலியம் துறையில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஷர்மிளா, கடந்த 8-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, தனது தந்தை வீட்டிற்கு சென்ற நிலையில், வீட்டில் இருந்த நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்