சாலையில் சாத்தான்..இந்த இடம் வந்தாலே கார்,பைக் எல்லாம் அந்தரத்தில் பறக்குது - மிரளவிடும் வீடியோஸ்
ஒசூர் அருகே சாலையில் விபத்தை ஏற்படுத்தும் வேகத்தடையை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். கர்நாடக மாநில எல்லையான ஜிகினி பகுதியில் உள்ள இருவழி சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையால் தினந்தோறும் விபத்துக்கள் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இந்த வேகத்தடையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.