பார்ப்பதற்கே அப்பாவி போல் இருக்கும் இவர் தான் அந்த ஜெகஜால கில்லாடி..ஒத்த பாஸ்வேர்டுக்கு ரூ.4 கோடி
திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த கணக்கு தணிக்கையாளர் மோகன்பாபு என்பவரிடம் முருகன் என்பவர் பணிபுரிந்து வந்தார். மோகன்பாபு தனது ஜிஎஸ்டி கடவுச்சொல்லை உதவியாளர் முருகனிடம் தெரிவித்து இருந்தார். இதனை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் ஜிஎஸ்.டி. வரி கட்டுவதற்காக அனுப்பிய ரூபாய் 4.25 கோடி பணத்தை கட்டாமல் முருகன் மோசடி செய்துள்ளார். அந்த பணத்தை முருகன் தனது மனைவி சீதாமலர்மதி வங்கி கணக்குக்கு அனுப்பி ஏமாற்றி உள்ளார். சில வாடிக்கையாளர்களுக்கு ஜி.எஸ்.டி வரி அலுவலகத்திலிருந்து சோதனை வந்ததையடுத்து, அவர்கள் மோகன்பாபுவிடம் விசாரணை நடத்தினர். அவர் அளித்த புகாரின்பேரில் முருகன் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய முருகனின் மனைவியையும் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட சீதா மலர்மதி அரியலூர் அரசு மருத்துவமனையில செவிலியராகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.