ஓசூரை நடுங்க வைக்கும் கருப்பு உருவங்கள் - அதிர்ச்சியில் மக்கள்.. வைரலாகும் வீடியோ
கெலமங்கலம் சாலையில் உள்ள குளோபல் சிட்டி என்ற தனியார் குடியிருப்புகளுக்குள் கடந்த 8 ஆம் தேதி இரவு மர்ம நபர்கள் புகுந்தனர். மங்கி குல்லா அணிந்திருந்த அவர்கள் அங்கு பூட்டப்பட்டிருந்த வீடுகளின் கதவை உடைத்து தங்கம், வெள்ளி பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை திருடி சென்றுள்ளனர். அதேபோல கடந்த 23ஆம் தேதி கார்களில் வந்த மங்கி குல்லா அணிந்த மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். இந்த காட்சிகள் குடியிருப்பு பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், போலீசார் இரவு ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.