ஓனருக்கு விழுந்த அரிவாள் வெட்டு.. முன்னாள் ஊழியர் செய்த பகீர் சம்பவம்.. அதிஷ்டவசமாக தப்பிய பிலிப்ஸ்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, முன்விரோதம் காரணமாக பேக்கரிக்குள் அரிவாளுடன் புகுந்த ஒருவர், உரிமையாளரை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்ஸ் என்பவர் பேக்கரி மற்றும் பாஸ்ட்புட் கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் அமலதாசன் என்பவர் பணியாற்றிய நிலையில், கருத்து வேறுபாட்டால் வேலையில் இருந்து நின்றுவிட்டார். இந்நிலையில், இரவில் மதுபோதையில் இருந்த அமலதாசன், அரிவாளை எடுத்துச் சென்று பேக்கரிக்குள் புகுந்து பிலிப்சை வெட்டியுள்ளார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அதுகுறித்த சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.