கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மானடிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் மனைவி ஜெயந்தி. இவர் கடந்த 18ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் நெய்வேலி அருகே உள்ள தனியார் பள்ளியில் தனது பிள்ளைகளை இறக்கி விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, காரில் வந்த மர்ம நபர்கள் ஜெயந்தியிடம் கத்தியை காட்டி மிரட்டி 5 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி ஓடினர். இதுகுறித்த புகாரின்பேரில் பண்ருட்டி வழியாக தப்பி சென்ற கொள்ளையர்கள் 3 பேரை நெய்வேலி போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த அரவிந்தன், ராமகிருஷ்ணன், வெங்கடேசன் என்பதும் பட்டதாரிகளான இவர்கள் பிட்காயின் நிறுவனத்தில் முதலீடு செய்து பல கோடி நஷ்டமானாதால் கொள்ளையடிக்க திட்டமிட்டதும் தெரியவந்தது. மேலும், இவர்களுடன் கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடிய மோகன்ராஜ் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.