சோசியல் மீடியாவில் ஷேரான பெண்கள் போட்டோஸ்... சென்னையை உலுக்கிய சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்

Update: 2024-10-09 11:13 GMT

சோசியல் மீடியாவில் ஷேரான பெண்கள் போட்டோஸ்...வீடியோ கால் டூ பெட் வரை தனிதனி ரேட் - சென்னையை உலுக்கிய சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்

தன் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, பாலியல் தொழிலில் பணம் சம்பாதித்து வந்த இளைஞரை, பாதிக்கப்பட்ட பெண்ணே போலீசில் பிடித்து கொடுத்து அதிரடி காட்டியிருக்கிறார். முழுப் பின்னணியையும் விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

பள்ளிப்படிப்பை கூட முடிக்காமல் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இருந்து கிளம்பி வந்த, இந்த கிருஷ்ணன் என்ற இளைஞர்தான், சென்னையை அதிரச் செய்யும் வகையில் மோசடி சம்பவம் ஒன்றை அரங்கேற்றி இருக்கிறார்...

இதனை அந்த இளைஞரே அதிர்ந்து போகும் அளவுக்கு, பாதிக்கப்பட்ட பெண்ணே வலை விரித்து பிடித்தது தான் இந்த சம்பவத்தில் எதிர்பாரா திருப்பம்...

தன் புகைப்படத்தை பயன்படுத்தியும், தான் பாலியல் தொழில் ஈடுபடுவதாகவும் கூறி ஆண்களிடம் சமூக வலைதளம் மூலம் கிருஷ்ணன் பணம் பறித்து வருவதை அறிந்து, சென்னையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக பணிபுரிந்து வரும் இளம் பெண் ஒருவர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்...

உடனே, பதற்றத்தில் அவரசப்படாமல்... கிருஷ்ணனை வசமாக பிடிக்க நினைத்த அப்பெண், தன் ஆண் நண்பர் ஒருவர் மூலம் அவரை ஆன்லைனில் தொடர்பு கொண்டு பேச்சு கொடுத்திருக்கிறார்..

அப்போது, பெண்ணின் ஆபாச புகைப்பட வேண்டுமென்றால் 500 ரூபாய் எனவும், வீடியோ காலில் நிர்வாணமாக வர வேண்டும் என்றால் ஆயிரத்து ஐநூறு ரூபாய் எனவும், உல்லாச வாழ்க்கைக்கு மூவாயிரம் ரூபாய் எனவும் கூறி ஒரு மெனு கார்டை கொடுத்திருக்கிறார் அவர்..

இதில் ஒன்றை தேர்ந்தெடுத்த அப்பெண், நபர் அனுப்பிய Gpay க்யூ ஆர் கோர்டு மூலம் பணம் செலுத்திய நிலையில், இந்த க்யூ ஆர் கோர்டையை அந்த கிருஷ்ணனை பிடிக்க பொறியாக போலீசிடம் கொடுத்து புகாரளித்திருக்கிறார்..

வழக்குபதிவு செய்து விசாரணையை கையிலெடுத்த சைபர் க்ரைம் போலீசார், க்யூ ஆர் கோர்டு, செல்போன் எண், வங்கி கணக்கு விவரம் என வழக்கை தூசி தட்டி, விழுப்புரத்தில் பதுங்கியிருந்த இந்த கிருஷ்ணனை கைது செய்துள்ளனர்..

விசாரணையில், பெண்ணிடம் பாலியல் தொழிலுக்கான மெனு கார்டை காட்டி பணம் பெற்றது போல், பல ஃபேக் ஐடிக்கள் மூலம் ஆண்களிடம் பணம் பெற்று, பின்னர் அவர்களை ப்ளாக் செய்து தப்பி விடுவது தெரியவந்திருக்கிறது...

இதில், சந்தேகம் கொண்டு செல்போனில் அழைக்கும் ஆண்களிடம்... இந்த கிருஷ்ணன், கேர்ள்ஸ் வாய்ஸ் சேஞ்சர் ஆப் மூலம் பெண் குரலில் பேசி மயக்கி இருந்ததும் அம்பலமானது...

இந்த மோசடியில் இளைஞர் லட்சக் கணக்கில் பணமோசடி செய்திருப்பது கண்டுபிடித்த போலீசார், கிருஷ்ணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கின்றனர்..

தன்னை ஆபாசமாக சித்திரித்து, அதனை புகைப்படமாக சமூக வலைதளத்திலும் பதிவிட்டு பண மோசடி செய்த இளைஞரை, பாதிக்கப்பட்ட பெண்ணே போலீசில் சிக்க வைத்த இந்த துணிகரம் மோசடி கும்பலை கதிகலங்க செய்திருக்கிறது...

Tags:    

மேலும் செய்திகள்