காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கல் பகுதியில் அருவிகள் பாறைகள் தெரியாத அளவிற்கு வெள்ளக்காடாய் காட்சியளிக்கின்றன. இதனால் ஒகேனக்கல்லில் 14வது நாட்களாக சுற்றுலா பயணிகளுக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒகேனக்கல்லில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை குறித்து தருமபுரி எம்பி மணி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.