உள்ளே மறைந்திருக்கும் பாம்பு - பைக், கார்களை எடுக்கும் போது உஷார் மக்களே
கடலூரில் கார் மற்றும் பைக்கில் புகுந்த பாம்புகள் மீட்கப்பட்டன. வெயில் அதிகரித்து இருப்பதால் குடியிருப்பு பகுதிகளை நோக்கி பாம்புகள் வரும் நிலையில், கூத்தப்பாக்கம் பகுதியில் காருக்குள் புகுந்து இருந்த பாம்பையும், செம்மண்டலம் பகுதியில் பைக் சீட்டில் பதுங்கி இருந்த பாம்பையும் வன ஆர்வலர் செல்லா மீட்டு, காப்புக்காட்டில் விட்டார்.