கள்ள கணக்கு எழுத ஊராட்சி தலைவர் - RTI மூலம் கிழிந்த முகத்திரை

Update: 2025-03-28 05:33 GMT

வாணியம்பாடி அருகே வீடுகள் கட்டுவதில் முறைகேடு நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்படியே அருகே உள்ள ஆலங்காயம் ஊராட்சிக்கு உட்டபட்ட மதனாஞ்சேரியில் கடந்த 2010 முதல் 2015 வரை ஐ.ஏ.ஓய் மற்றும் பசுமை வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 5 நபர்களின் பெயர்களில் முறைகேடு நடந்துள்ளது. அப்போதைய மதானஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி முருகேசன், ஊராட்சி செயலர், மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டவர்கள் இதன் மூலமாக பல லட்சம் ரூபாய் கையாடல் செய்திருப்பது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தெரியவந்தது. இந்த விவகாரத்தில் மாவட்ட ஊராட்சி செயலர் ஆய்வில் ஈடுபட்டார். மேலும், இரண்டாம் கட்ட விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்