3வது முறை திருமணம்... பல சர்ச்சைகளுக்கு பின் கை கோர்த்த சிறுத்தை சிவா தம்பி
3வது முறை திருமணம்... பல சர்ச்சைகளுக்கு பின் கை கோர்த்த சிறுத்தை சிவா தம்பி
சர்ச்சைகளுக்கு நடுவே, இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரரும், நடிகருமான பாலா தனது தாய்மாமன் மகள் கோகிலாவை திருமணம் செய்து கொண்டார்.
பாடகி அம்ருதாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் பாலா, 12 வயதில் மகள் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார்.
அதன்பின் கடந்த 2021-ஆம் ஆண்டு எலிசபெத் என்ற மருத்துவரை பாலா திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவரும் தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர்.
அம்ருதாவுடனான திருமணத்துக்கு முன்னதாக சந்தானா சதாசிவம் என்ற பெண்ணுடன் பாலா வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, விவாகரத்து நடைமுறைகளை மீறி தன்னை துன்புறுத்துவதாக அம்ருதா அளித்த புகாரில் பாலா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில் தனது தாய் மாமன் மகள் கோகிலா என்பவரை பாலா திருமணம் செய்துகொண்டார். எர்ணாகுளத்தில் உள்ள பாவகுளம் கோயிலில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் இவர்களின் திருமணம் நடைபெற்றது. 250 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது சொத்துக்களை பாதுகாக்கவும், தன்னுடைய உடல்நலத்தை கவனித்துக் கொள்ளவும் துணை தேவைப்படுவதால் திருமணம் செய்து கொண்டதாக பாலா தெரிவித்துள்ளார்.