ஹாங்காங் உடன் இமாலய வெற்றியை ருசித்த பாகிஸ்தான்
ஆசிய கோப்பை தொடரில், ஹாங்காங் அணியை 155 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பாகிஸ்தான் அணி சூப்பர் ஃபோர் சுற்றுக்குள் நுழைந்தது. ஷார்ஜாவில் நடைபெற்ற போட்டியில்,
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் சிறப்பாக விளையாடி 78 ரன்கள் சேர்த்தார். அடுத்து
விளையாடிய ஹாங்காங் அணி, பாகிஸ்தானின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், 10.4 ஓவர்களில் 38 ரன்களுக்கு சுருண்டது. பாகிஸ்தான் தரப்பில் ஷாதாப் கான் ௪
விக்கெட்டுகளையும், முகமது நவாஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்மூலம் 155 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, நான்காவது அணியாக சூப்பர்
ஃபோர் சுற்றுக்கு தகுதி பெற்றது.