திடீரென MS Dhoni-யை புகழ்ந்து பேசிய யுவராஜ் சிங்கின் தந்தை | Yuvraj Singh

Update: 2025-01-13 02:00 GMT

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி அச்சமற்ற வீரர் என யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் பாராட்டியுள்ளார். பொதுவாக தோனியை கடுமையாக விமர்சிக்கும் வழக்கத்தைக் கொண்டவர் யோக்ராஜ் சிங்... யுவராஜ் சிங்கின் கேரியரை தோனிதான் அழித்ததாக அவர் பல முறை குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில் தனது வழக்கத்திற்கு மாறாக தோனியை புகழ்ந்துள்ள யோக்ராஜ் சிங், மிகவும் உத்வேகம் அளிக்கும் கேப்டனாக தோனி திகழ்ந்ததாகவும் ஆட்டத்தின் சூழலை கையாள்வதில் தோனி சிறந்து விளங்கியதாகவும் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்