ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் முன்னணி வீரர் மெத்வதேவ் ((MEDVEDEV)) போராடி வெற்றி பெற்றார். தாய்லாந்து வீரரை சாம்ரெஜை(SAMREJ) எதிர்கொண்ட அவர், முதல் செட்டை வென்றாலும், அடுத்தடுத்து இரண்டு செட்களை இழந்து தடுமாறினார். குறிப்பாக மூன்றாவது செட்டில் ஒரு பாயிண்ட்டை நழுவவிட்டதால் கோபத்தின் உச்சிக்கு சென்ற மெத்வதே, நெட் கேமராவை ஆவேசமாக அடித்து ராக்கெட்டை உடைத்தார். இந்த செயலுக்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.